Menu
Your Cart

பாரதிதாசன் பேசுகிறார்

பாரதிதாசன் பேசுகிறார்
-5 %
பாரதிதாசன் பேசுகிறார்
மருதன் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. உன் நண்பனைத் தவிர’ என்று என்னை அழைத்தால், ‘என் நண்பன் இல்லாத இடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்' என்று கேட்பேன். ‘உன் நண்பன் அட்டிகஸ் நரகத்திலிருக்கிறான், வா என்றால், உடனே கிளம்பிவிடுவேன். நண்பன் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்?’ என்று ரோமாபுரி தத்துவஞானி சிசரோ கேட்கும்போது, நட்பு எவ்வளவு உயர்ந்ததாகத் தெரிகிறது! ‘கடவுள் அல்ல, மனிதன்தான் சாதியை உருவாக்கினான். கடவுள் அல்ல, மனிதன்தான் வெறுப்பைக் கண்டுபிடித்தான். கடவுளுக்குத் தெரிந்த மொழி கருணை மட்டுமே. மனிதனிடம் அந்த மொழியில்தான் பேசினார். நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டது அதைத்தான். உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதும் அதைத்தான்’ என்று நாராயண குரு சொல்லும்போது, வெறுப்பை விதைப்பவர்களும் அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்! ‘தேன்போல் குழைந்துகொண்டிருந்த நான், குளவியாக மாறியது பாரதியால். ‘தமிழ்’ என்றால் இனிமை மட்டுமல்ல, வீரமும்தான் என்று நான் அறிந்தது பாரதியால். என் உணர்வாகவும் உயிராகவும் சொல்லாகவும் செயலாகவும் நிறைந்திருப்பவர் பாரதி. என் கவிதைகள் உங்களைச் சுடுகின்றன என்றால், அதற்குக் காரணம் பாரதியிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட கனல்’ என்று பாரதிதாசன் பேசும்போது பாரதியையும் பாரதிதாசனையும் நினைத்துப் பெருமிதம் பொங்குகிறது!
Book Details
Book Title பாரதிதாசன் பேசுகிறார் (Bharathidasan pesugiraar)
Author மருதன் (Marudhan)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 112
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
₹181 ₹190
திபெத்தை ஒரு தனி நாடாகத்தான் நமது வரைபடங்கள் காட்டும். ஆனால் இன்றுவரை சீனா இதனைத் தன்னில் ஒரு பகுதியாகத்தான் அறிவித்து மேலாதிக்கம் செய்துவருகிறது. தமக்கென ஒரு திட்டவட்டமான வரலாறு இல்லாத காரணத்தாலேயே சரித்திரத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் திபெத் மக்கள். திபெத்துக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவிக்கும் அமெரிக்..
₹204 ₹215
உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு. உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படு..
₹214 ₹225
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்த..
₹190 ₹200